சர்வதேச அழகி போட்டியில் வெற்றிபெற்ற பாராகுவே அழகி மேடையில் மயங்கி விழுந்தார்… பரபரப்பு

மியான்மர்:

மியான்மர் நாட்டின் யாங்கூன் நகரில் 2018ம் ஆண்டுக்கான சர்வதேச அழகி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பாராகுவே நாட்டு  அழகி அதே மேடையிலேயே மயங்கி விழுந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

2018ம் ஆண்டுக்கான சர்வசதே அழகி போட்டி மியான்மர் நாட்டில் நடைபெற்று வந்தது. கடந்த வியாழக்கிழமை இறதிப்போட்டி நடைபெற்றது. அழகி போட்டிக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான அழகிகள் கலந்துகொண்டனர்.

மேடையில் மயங்கி விழுந்த  சர்வதேச அழகி

இறுதிப்போட்டியான,  மிஸ் கிராண்ட் இண்டர்நேஷனல் 2018 போட்டி யாங்கூன் நகரில் பிரமாண்டமாக  நடைபெற்றது. இந்த அழகி போட்டியில்,  கிளாரா சோஸா (Clara Sosa) என்ற பாராகுவே நாட்டு அழகி இந்த ஆண்டின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இதைக்கேட்டதும் ஆனந்த அதிர்ச்சி அடைந்த கிளாரா அதே மேடையிலேயே மயங்கி விழுந்தார். இது போட்டியாளர்களிடையே பரபரப்பை எற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் அறிவிப்பு வெளியாகும்போது,  இரண்டாவது வெற்றியாளரான இந்திய அழகி மீனாஷி சவுதாரியின் கைகளை பிடித்துக்கொண்டு வெற்றியாளர் யார் என்பதை அறியும் ஆவலுடன் காத்திருந்த போது, கிளாரா  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், மகிழ்ச்சியின் காரணமாக அவர் மயங்கினார். அவரை தாங்கிப் பிடிக்க  இந்திய அழகி முயற்சித்த நிலையிலும், அழகி சோஸா மேடையின் தரையில்  விழுந்தார்.

இதன் காரணமாக சிறிது நேரம் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் நினைவு திரும்பிய கிளாரா, மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார். அவருக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

வெற்றியாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் ஒரு பேட்டியில் கூறிய கிளாரா சோஸா, தனக்கு மாரடைப்பு வரும் என உணர்ந்ததால் டாக்டர் தேவை என்று கூறியிருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.