சல்மான் கானின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என நெட்டிசன்கள் சாடல்….!

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை செய்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது.

மன அழுத்தம் காரணமாக தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதுதான் உண்மையான காரணமா என்பது பற்றி சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக சுஷாந்த் சிங் ரசிகர்கள், முன்னணி நடிகர்கள் பலரையும் சினிமா வாரிசு அரசியல் என திட்டித் தீர்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று (14.08.20) நடிகர் சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய சொந்த நிறுவனமான ‘பீயிங் ஹ்யூமன் க்லோத்திங்’ தயாரித்த முகக் கவசம் ஒன்றை அணிந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

‘பீயிங் ஹ்யூமன்’ என்ற பெயரை கிண்டல் செய்யும் தொனியில் ட்விட்டர்வாசி ஒருவர் ‘கிரிமினலான இவர் 10 ரூபாய் தானம் செய்து விட்டு 1000 ரூபாய் என்று விளம்பரம் செய்வார். வழக்கம்போல தான் செய்த குற்றங்களை மறைத்து விடுவார்.’ என்று பின்னூட்டத்தில் விமர்சித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பலரும் சல்மான் கான கடுமையாக சாட தொடங்கி விட்டனர். சுஷாந்த்துக்கு நீதி கிடைக்க சல்மான் கானின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பின்னூட்டங்களில் கூறினர்.