சாதிக்காக   ஒரு படம்

sethu-boomi-movie-1

கலைக்கு இனம் மதம் மொழி கிடையாது என்பார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக உலாவரும் வாட்ஸ் அப் தகவல் ஒன்று அதை பொய்யாக்கியிருக்கிறது.

சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது ‘சேதுபூமி’ என்ற திரைப்படம். கமலின் “தேவர் மகன்” படத்தின் மினியேச்சர்தான் இந்தப்படம். அதாவது லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள தேவர் மகன்.

படம்  எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ( எதிர்பார்க்க வேற செஞ்சீங்களா டைரக்டர் சார்?)

ஆகவே, படத்தின் டைரக்டர் கேந்திரன் முனியசாமி என்பவர்  வாட்ஸ்அப்பில் ஒரு தகவலை தட்டிவிட்டிருக்கிறார். அதில், ““நம்ம ஜாதியின் பெருமையை சொல்லணும்னுதான் இந்த படத்தையே நான் இயக்கியிருக்கேன். ஆனால் நம்ம சாதி சனமே இந்த படத்துக்கு அவ்வளவு பெரிய ஆதரவுகொடுக்கலே என்று நினைத்தால் கவலையாக இருக்கிறது’  என்று பதிவிட்டிருக்கிறார் இயக்குநர்  முனியசாமி..  இந்த வாட்ஸ் அப் தகவலை பலரும் பகிர்ந்துவருகிறார்கள்.

இதற்கு பதிலடியாக இன்னொரு வாட்ஸ்அப் தகவல் பரவி வருகிறது. அதில், “சொந்த சாதிக்காரன் பாக்கலையே  என்று  விரக்தியாக சொல்கிறாரே… படத்தின் உருவாக்கத்தில் பங்குபெற்ற எல்லோருமே உங்க சாதிதானா.. தவிர படத்தை உங்க சாதிக்காரங்க மட்டும் பார்த்தா போதுமா…”” என்று பதிவிடப்பட்டிருக்கிறது.

சரியான கேள்விகள்தான்!

Leave a Reply

Your email address will not be published.