·1

ந்தே  மாதங்களில் 174 கிலோமீட்டர் வாய்க்கால் வெட்டி இ நதிகளை இணைத்து சாதனை படைத்துள்ளனர்…
இதுவல்லவா நீர் மேலாண்மை.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ்
ஆந்திராவின் முக்கிய நதிகளான
கோதாவரி, மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என
அறிவித்திருந்தார்.

கடந்த ஜனவரி 1ஆம் தேதி திட்டம்
அறிவிக்கப்பட்டு, மார்ச் 9ஆம் தேதி
திட்டப்பணிகள் தொடங்கின. அதன்படி கோதாவரியில் இருந்து வாய்க்கால் வழியாக தண்ணீர் கொண்டு வந்துஆந்திராவின் மேற்கு கோதாவரி
மாவட்டத்தில் உள்ள பட்சீமா கிராமத்தில், கிருஷ்ணா நதியில் வந்து இணையும் படி திட்டம் தீட்டப் பட்டிருந்தது.
இதற்காக 174 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாய்க்கால் வெட்டப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் 5 மாதம் 15 நாட்களிலேயே நிறைவடைந்தது.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த திட்டம், நாட்டுக்கு அர்ப்பணித்து
வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இந்த திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு
நாயுடு விஜயவாடாவில் தொடங்கி
வைத்தார்.
இதனால் ராயலசீமா, கிருஷ்ணா
டெல்டா பகுதியில் 7 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும்.
கிருஷ்ணா நதியில் இணைய ஓடி வரும் கோதாவரி நீர் கோதாவரியில் இருந்து வாய்க்கால்
வழியாக வந்த தண்ணீர், பட்சீமா கிராமத்தின் வழியாக ஓடும் கிருஷ்ணா நதியில் திறந்து விடப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் 80 டிஎம்சி தண்ணீர் வீணாவது தடுக்க முடியும். அதோடு இரு நதிகளும்
இணையும் பட்சீமா கிராமமும்
சுற்றுலாத்தளமாக மாற்றப்பட உள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தியாகி
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை
வளம் கொழிக்க வைக்கும் கோதாவரி நதி சுமார் 1465 கிலோ மீட்டர் தொலைவு ஓடி வங்கக் கடலில் கலக்கிறது.
இந்தியாவில் கங்கை நதிக்கு பிறகு 2வது நீளமான நதி கோதாவரிதான். கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரம் டி.எம்.சி.
தண்ணீர் கடலில் சென்று வீணாகிறது.
கிருஷ்ணா நதி மகாராஷ்டிரம், கர்நாடகா,
ஆந்திரா, தெலுங்கானா வழியாக வங்க கடலில் சென்று சேர்கிறது.
தமிழகத்தில் ஆறுகளை இணைக்க
வேண்டாம்.
அழிக்காமலாவது இருப்பார்களா?
கே.எஸ். ராதாகிருஷ்ணன்