சாந்தனுவின் “கொஞ்சம் கொரோனா நிறைய காதல்” குறும்பட டீஸர்….!

கொரோனா லாக்டவுன் மக்கள் அனைவரது வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது.வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் மற்றவர்களை போலவே சினிமா பிரபலங்களும் வீட்டிலிருந்தே சமூக வலைத்தளத்தில் பெரும்பான்மையான நேரத்தை கழித்து வருகின்றனர் .

கொரோனா லாக்டவுனில் நடிகர் சாந்தனு தனது மனைவி கீர்த்தி உடன் இணைந்து ட்விட்டரில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சாந்தனு-கீர்த்தி இருவரும் இணைந்து வீட்டிலேயே ஒரு குறும்படம் இயக்க உள்ளதாக ஒரு வீடியோ மூலமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

“கொஞ்சம் கொரோனா நிறைய காதல்” என அந்த குறும்படத்திற்கு பெயர் வைத்திருப்பதாக ட்விட்டரில் கூறியுள்ள சாந்தனு, அதன் டீசரையும் வெளியிட்டுள்ளார்.

இது முழுக்க முழுக்க வீட்டில் ஐபோனிலேயே எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.