சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சாமி மறைவு : மூன்று நாள் அரசு துக்கம்

--

துமக்கூரு

ர்நாடக மாநிலம் துமக்கூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சாமி இன்று காலை 11.44 மணிக்கு மரணம் அடைந்தார்.

லிங்காயத்துகளின் மடமான சித்தகங்கா மடம் துமக்கூருவில் அமைந்துள்ளது.    சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவகுமார சாமிக்கு தற்போது சுமார் 110 வயதாகிறது.   இவருக்கு சென்ற மாதம் சென்னையில் பித்தப்பை  அறுவைச் சிகிச்சை நடந்து மடத்துக்கு திரும்பினார்.

கடந்த 15 நாட்களாகவே அவர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார்.   அவரை முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் நலம் விசாரித்தனர்.   அவருடைய சேவைகளை பாராட்டி இஸ்லாமிய அமைப்புக்களும் அவருகாக பிரார்த்தனைகள் நடத்தின.

ஆயினும் உடல் நலம் தேறாத சிவக்குமார சாமி இன்று காலை சுமார் 11.44 மணிக்கு மரணம் அடைந்தார்.  அவரது மறைவு அவருடைய பக்தர்களுக்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி அவர் மரணத்தை ஒட்டி மூன்று நாட்கள் துக்க தினமாக அறிவித்துள்ளார்.  மேலும் அவர் மரணத்தை ஒட்டி நாளை கர்நாடகா மாநிலம் முழுவதும் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அவருடைய இறுதிச் சடங்குகள் நாளை அதாவது 22 ஆம் தேதி மாலை4.30க்கு நடைபெற உள்ளது.

அவருடைய இறுதிச் சடங்குகளில் கலந்துக் கொள்வோர் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  மேலும் மடம் அமைந்துள்ள பகுதிகளில் அரசு சார்பில் மக்கள் தங்க பெரிய பந்தல் மற்றும் பொதுக் கழிபிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.