சித்திரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் ஆன்லைன் மூலம் வாகனம் நிறுத்த சிறப்பு ஏற்பாடு!

திருவண்ணாமலை:

ரும் 30ந்தேதி சித்ரா பவுணர்மி வருவதையொட்டி, திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வார்கள். இதன் காரணமாக ஆயிரக்கணக்கில் வாகனங்கள் திருவண்ணாமலையை பகுதியை முற்றுகையிடும்.

திருவண்ணாமலையில்  சித்திராபவுர்ணமி கிரிவலத்தில் பங்கேற்க வரும் பக்தர்களுக்காக ஆன்லைன் கார்பார்க்கிங் முன்பதிவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிகளை முன்னிட்டு, வாகனங்களை நிறுத்தம் செய்வதற்கு வசதியாக கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆன்லைன் மூலம் வாகனம் நிறுத்தும் இடத்திற்கான இடங்களை தேர்வு செய்யும் வகையும் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டுளளது.

அதன்மூலம் வரும் 29ம் தேதி மற்றும் 30ம் தேதி வரையிலும் 190 வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

http://www.tvmpournami.in என்ற இணையதளத்தின் மூலம் 5 மணி நேரம் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்காக முன்பதிவு செய்யலாம்.

மேலே உள்ள இணையதளத்தினுள் சென்று அதில் குறிப்பிட்டுள்ள இடங்களில், தேவையான இடத்தை தேர்வு செய்து, அதில், வாகன விபரம் மற்றும் உரிமையாளரின் ஆதார் விபரங்களை பதிவிட்ட பின்னர் பார்க்கிங் இடத்தை பதிவு  செய்யலாம்.

தற்போது இந்த திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்படுவதாகவும், விரைவில் இந்த திட்டத்தை வரும் திருவிழாக்காலங்களில் முழுவீச்சில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட எஸ்.பி. பொன்னி கூறியுள்ளார்.