12196274_1212999542047576_8784079917032470030_n
சித்த மருத்துவ படிப்பு 51/2 ஆண்டு காலம் நடத்தப்படுகிறது. இது என்ன கணக்கு என்று தெரியவில்லை எம்.பி.பி.எஸ். 51/2 வருடம் என்பதாலோ?

ஆனால் நவம்பர் ஆன பிறகும் இன்னும் சித்த மருத்துவ வகுப்புகள் துவங்கப்படவில்லை. இளம் பருவத்தில் 6 மாதம் வீணாக்குவது எவ்வளவு தவறு

காரணம் mbbs அட்மிஷன் முடிந்து அதில் சீட் கிடைக்காதவர்கள் இதில் சேரட்டும் என்ற ஏற்பாடு. இது அடிப்படையே தவறாகும் ஆங்கில மருத்துவ படிப்பில் சீட் கிடைக்காதவர்கள் வேண்டாவிருப்பா இதில் சேறும் நிலை உள்ளது

+ 1 வகுப்பில் சித்த மருத்துவம் விருப்ப பாடமாகவும் சில பள்ளிகளில் உள்ளது . ஆனால் இது வரை 11 ஆம் வகுப்பில் சித்த மருத்துவம் விருப்ப பாடமாய் எடுத்து படித்த ஒரு மாணவருக்கு கூட இதுவரை bsms சித்த மருத்துவ வகுப்பில் சேர்க்கை வழங்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை

இதை மாற்றி மேலும்பல பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் சித்தா விருப்ப பாடமாய் வைத்து அவர்களே சித்தாவில் சேறும் வகை செய்யப்பட வேண்டும்

வகுப்புகள் ஜூன் ஜூலையில் துவங்கி 4 அல்லது 41/2 வருடத்தில் சித்த மருத்துவம் வகுப்பை முடிக்கலாம் செய்வார்களா?

  • க.திருத்தணிகாசலம்