kabali

லக நாடுகளின் ரகசியங்களை புட்டு புட்டு வைக்கும் விக்கிலீக்ஸைவிட, தமிழ் ஸ்டார்களின் பட ஷூட்டிங் ஸ்டில்கள் அவ்வப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

சமீபத்தில் திரையுலகினரை இரு வீடியோக்கள்.பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின ஒன்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கபாலி படம் தொடர்பானது. இந்த படத்தின் முக்கியமான படக்காட்சி படமாக்கப்பட்ட போதே, செல்போனில் துல்லியமாகப் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைத் தளங்களில் உலாவந்தது.

மலேசியாவிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு ரஜினி வருவது போன்ற காட்சி அது. இயக்குநர் ரஞ்சித், அந்தக் காட்சியை ஓகே செய்யும் தருணமாகப் பார்த்து பதிவு செய்திருக்கிறார்கள். இது கபாலி யூனிட்டுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

விமான நிலையத்துக்குள் இருந்த ரசிகர் ஒருவர்தான் இப்படிச் செய்துவிட்டார் என்று சொல்லி, இதுபோல இனி பகிர வேண்டாம் என படக்குழு வேண்டுகோள் விடுத்தது.

400CPm7Ce8WcAA8Urjஅடுத்து, அஜீத்தின் வேதாளம் படக் காட்சி ஒன்றும் தற்போது வெளியாகி இருக்கிறது. பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது ஒரு நிமிட நேரம் எடுத்திருக்கிறார்கள்.

இதற்கு முன்பு விஜய் நடித்த புலி படத்தின் டீசர், ட்ரைலர், ஸ்டில்கள் எல்லாம் இப்படி வெளியாகி, அது போலீஸ் வழக்கு வரை போனது.

இப்படி முக்கிய நடிகர்களின் படத்திலிருந்து காட்சிகள் லீக் ஆகவது திரைத்துரையினரை பெரிதும் கவலைப்பட வைத்திருக்கிறது.

“பல கோடி ரூபாய் போட்டு படம் எடுக்கிறோம். ஒவ்வொரு நிமிட காட்சிக்கும் லட்ச லட்சமாக செலவு ஆகிறது. பெரிய நடிகர்கள் படம் என்றால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஆகவே படத்தில் பல விசயங்களை ரகசியமாக வைத்து, ரிலீஸ் செய்தால்தான் மக்களுக்கு மகிழ்ச்சியான அனுபவம் கிடைக்கும்.

ஆனால் படப்பிடிப்பு காட்சிகளை ஆர்வக்கோளாறால் சிலர் செல்போனில் படம் பிடித்துவிடுகிறார்கள்.

தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் என்று தகவல் தொடர்பு மிக எளிதாகிவிட்டது. அதனால் தாங்கள் படம் எடுத்த காட்சியை எளிதாக பரவ விட்டுவிடுகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்ட படத்துக்கு எவ்வளவு பிரச்சினை, நட்டம் என்பதை அவர்கள் உணர்வதில்லை. பெரும் பெரிய பட்ஜெட் படங்கள் அல்லது பெரிய ஹீரோக்களின் படங்களின் ரகசியத்தை காப்பாற்றுவது பெரும்பாடாகிவிட்டது” என்று புலம்புகிறார்கள் திரை உலகினர்.

rஅதே கோலிவுட்டில் வேறுவிதமான கருத்தும் உலவுகிறது.

“எதற்கெடுத்தாலும் ரசிகர்கள் மீது குறை சொல்வதே சிலரது வாடிக்கையாகி விட்டது. போட்டி நடிகரின் படக்காட்சிகளை ஆள் வைத்து எடுத்து பரவவிடுவதும் நடக்கிறது. அது மட்டுமல்ல.. தாங்களே படக் காட்சியை இணையதளங்களில் பரவவிட்டு விளம்பரம் தேடும் படக்குழுவினரும் இருக்கிறார்கள்” என்கிறார்கள்.