சிறப்பு தகுதி உடைய பழனிவேல் ராஜன் மகன் போட்டியிடுகிறார்

1

டாக்டர் பழனிவேல் தியாகராஜன் (பிடிஆர்)
பள்ளி படிப்பு – YWCA பள்ளி மற்றும் ரோட்டரி பள்ளி, மதுரை (ஆரம்பக் கல்வி), லீனா பள்ளி மற்றும் லாரன்ஸ் பள்ளி, லவ்டேல் (10ஆம் வகுப்பு வரை), விகாசா மேல்நிலைப் பள்ளி, மதுரை (12ஆம் வகுப்பு வரை)
கல்லூரி படிப்பு – பி.டெக் (ஹானர்ஸ்) கெமிக்கல் என்ஜினியரிங், என்ஐடி திருச்சி, எம்.எஸ். ஆபரேஷன்ஸ் ரிசர்ச் மற்றும் பி.எச்.டி Human Factors Engineering / Engineering Psychology, நியூயார்க் பல்கலைக்கழகம், எம்.பி.ஏ (நிதி), எம்.ஐ.டி Sloan School of Management
அனுபவம் – நியூயார்க் பல்கலைக்கழக விரிவுரையாளர், உலகின் முன்னணி நிறுவனங்களில் நிதி ஆலோசகர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தவர், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் குடும்ப பண்ணையை திறம்பட நிர்வகித்தவர் என பன்முகத் திறமை கொண்டவர்.

குறிப்பிடத்தக்க அம்சங்கள்
கல்வியில் சிறந்தவர் – GRE தேர்வில் 96%க்கும் அதிக மதிப்பெண் பெற்று என்ஐடி திருச்சியில் சேர்ந்தவர், TOEFL தேர்வில் 100% மதிப்பெண்ணும், GMAT தேர்வில் 99%க்கும் அதிகமான மதிப்பெண்களும் பெற்று சாதனை.
(Career Highlights:
Academic Record – including admission to NIT, Trichy on merit, 96+%le plus on GRE, 100% on TOEFL, 99+%le on GMAT, GPA of 3.9/4.0 at State University of New York, and 5.0 /5.0 at MIT)

விஞ்ஞானத்துறை சாதனைகள் – அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய அளவில் நடைபெற்ற விஞ்ஞானக் கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கிறார். இவரது ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. எர்கோனாமிக்ஸ் தொடர்பான சர்வதேச தர ஆணையத்தின் உறுப்பினராக இருந்தவர். அமெரிக்காவில் தனது படைப்புகளுக்காக காப்புரிமை பெற்றவர். (US Patent # 20060253386)

தொழில்முறை சாதனைகள் – ஆட்டோமோடிவ், ராணுவம், எலெக்ட்ரானிக்ஸ், உற்பத்தி மற்றும் அச்சுத் துறைகளின் சிறப்பு ஆலோசகராக இருந்தவர். லேமன் பிரதர்ஸ் நிறுவனத்திற்காக உலகின் மிகப் பெரிய மற்றும் அதிநவீன உலக மைய நிறுவனத்தை உருவாக்கி நடத்தியவர். ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கிக்காக உலகளவில் 650 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.4300 கோடி) மதிப்பிலான தொழில்களை கையாண்டவர்.

50க்கும் மேற்பட்ட நாடுகளில் பயணம் மேற்கொண்டு பரந்துபட்ட உலகப் பார்வை கொண்டவர்.

– Anbalagan Veerappan  (முகநூல் பதிவு)