சிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கல்: ராஜேஷ் லக்கானி்யிடம் திமுக புகார்

rajesh lakkani

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுக அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அளித்துள்ளார்.
அம்மனுவில், ”முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி தங்கும் சென்னையை அடுத்த சிறுதாவூர் பங்களாவில் கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் 10 கண்டெய்னர் லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அங்கு வாக்காளர்களுக்கான பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததாகவும் பின்னர் அந்த லாரிகள் அங்கிருந்து வேறிடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன என்றும் செய்திகள் வந்துள்ளன. , அந்த வாகனங்களின் நடமாட்டம் குறித்தும் அந்த பங்களாவிலும் உடனடியாக முழுமையாக சோதனை நடத்தப்படுவது முறையாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கு அவசியமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.