Warning: sprintf(): Too few arguments in /mnt/stor14-wc1-dfw3/www.patrikai.com/web/content/wp-content/themes/covernews/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

‘சிவபெருமானாக’ லாலுவின் மகன் தேஜ் பிரதாப் : மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்ததாக பேட்டி

--

ராஷ்டிரிய ஜனதா தள மாநிலத் தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் இன்று பாட்னாவில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று சிவபெருமானைப் போல ஆடைகள் அணிந்துகொண்டு பிரார்த்தனை செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத்தின் மகன், தேஜ்பிரதாப் யாதவ். இவர், ராஷ்டிரிய ஜனதாதள மாநில தலைவராக உள்ளார். இவர், இன்று பாட்னாவில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று சிவபெருமானைப் போல ஆடைகள் அணிந்துகொண்டு பிரார்த்தனை செய்தார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

“பீகார் மக்கள் நலமாக இருக்கவேண்டும் எனவும், நாடு முழுவதும் அனைவரும் எந்தவொரு பிரிவினையோ அல்லது தடையையோ இல்லாமல், இணக்கமாக. அமைதியாக வாழ வேண்டும் எனவும் நான் பிரார்த்தனை செய்தேன்.

மேலும், என் தந்தை லாலுபிரசாத்யாதவின்  உடல்நலத்திற்காகவும் அவர் நீண்டகாலம் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன்” என்றார்.

ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மருத்துவமனை மற்றும் மும்பை மருத்துவமனை ஆகியவற்றின் பரிந்துரையின்பேரில் கடந்த மார்ச் 29லிருந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பெற்று வந்தார். மும்பையில் இதய சிகிச்சை பெற்று ஜூலை 8ம் தேதி  பாட்னா திரும்பினார்.

கடந்த வருடம்  தேஜ் பிரதாப் இதேபோல இந்துக் கடவுள் கிருஷ்ணரைப் போல வேடம் பூண்டார்.  சிவப்புத் தலைப்பாகை அணிந்துகொண்டு புல்லாங்குழல் கையில் வைத்துக்கொண்டு விளையாடிய வண்ணம் ஆங்கில புத்தாண்டு தினத்தைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.