சி.பி.ஐ.,இயக்குனரை நீக்க அவசரம் ஏன்?: ராகுல் கேள்வி

“சி.பி.ஐ., இயக்குநர் அலோக் வர்மாவை அவசர அவசரமாக நள்ளிரவில் நீக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று காங்கிரஸ், தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

டில்லி காங்கிரஸ், தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்தை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

 

 

 

 

“சி.பி.ஐ., இயக்குநர் அலோக்வர்மா நீக்கம் நள்ளிரவில் நடந்திருக்கிறது. இதில் . இவ்வளவு அவசரம் காட்டவேண்டிய காரணம் என்ன?  அலோக்வர்மாதான் ரஃபேல் விமானம் தொடர்பான விஷயத்தை கையாண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்கட்சி தலைவர் அடங்கிய குழுதான் சி.பி.ஐ., இயக்குநரை நியமிப்பது வழக்கம். சி.பி.ஐ.,இயக்குனரை நீக்க வேண்டுமானால் மூன்று குழுக்களின் அனுமதி பெற வேண்டியதும் அவசியம்.

ஆனால் இது எதையும் செய்யாமல், தன் விருப்பத்துக்கு மத்திய மத்திய அரசு செயல்பட்டிருக்கிறது. சி.பி.ஐ., இயக்குனர் நீக்கம் சட்டவிரோதமானது. மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கை தலைமை நீதிபதி, எதிர்கட்சி தலைவர், இந்திய மக்கள் ஆகியோரை அவமதிப்பதாகும்.

மத்திய அரசு சி.பி.ஐ.. என்கிற அமைப்பையே  அவமதிக்கிறது. ரஃபேல் விவகாரத்தை நீர்த்துப்போகவே  இப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள். அதில் ஊழல் நடந்ததற்கான  ஆதாரத்தை அழிக்க அரசு முயல்கிறது” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.