சுதந்திரமான அரசு அமைப்புக்களை சிதைக்கும் பாஜக : மம்தா

--

கொல்கத்தா

சுதந்திர அமைப்புக்களான சிபிஐ, ரிசர்வ் வங்கி போன்றவற்றை பாஜக சிதைத்து வருவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டிஉள்ளார்.

சமீப காலமாக மத்திய பாஜக அரசு ரிசர்வ் வங்கியின் சுதந்திர் தன்மையில் தலையிடுவதாக எழுந்த கருத்துக்களால் கட்ம் சர்ச்சை நிலவி வருகிறது. இதனால் ரிசர்வ் வங்கி ஆளுனர் பதவி விலகுவார் என செய்திகள் பரவி வருகின்ற்ன. ஏற்கனவே சிபிஐ விவகாரங்களில் அரசு தலையீடு உள்ளதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது தெரிந்ததே.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கொல்கத்தாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “நாட்டின் உயரிய மற்றும் சுதந்திரமான அமைப்பபுக்களான சிபிஐ, ரிசர்வ் வங்கி போன்றவற்றை பாஜக சிதைத்து வருகிறது. இந்த அமைப்புக்களீன் செயல்பாட்டை மாற்றி அழிக்க பாஜகவினர் நினைக்கின்றனர். அதை காக்க திருணாமுல் காங்கிரஸ் பெரும் பங்கு வகிக்கும்.

மக்களை மத ரீதியாக பிரிக்க தேசிய குடிமக்கள் பதிவு என்னும் திட்டத்தை பாஜக செய்து வருகிறது. ஆனால் திருணாமுல் காங்கிரஸ் இதை ஒருபோதும் சகித்துக் கொல்ளாது. இந்த தேசத்தை பாஜகவிடம் இருந்து காப்பாற்ற எங்கள் கட்சி வரும் நாட்களில் முக்கிய பணி ஆற்றும்.

அரசியல் உள்நோக்கத்துடன் யாத்திரைகளை காவிக் கட்சியான பாஜக நடத்தி வருகிற்து. ஆனால் நாங்கள் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க யாத்திரைகள் நடத்துகிறோம். வரும் ஜனவரி மாதம் நடைபெற உள எதிர்க்கட்சிகள் பேரணிக்கு அனைத்து கட்சிகளையும் அழைக்க உள்ளேன்” என தெரிவித்தார்.