சுந்தர்.சி – ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் ‘நட்பே துணை’. தொடர்ந்து ‘முரட்டு சிங்கிள்’

 

 சுந்தர். சி தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தை அடுத்து இந்த கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள படம் ‘நட்பே துணை’.

முடிவடையும் தருவாயில் இருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக சுந்தர்.சி – ஹிப்ஹாப் தமிழா ஆதி கூட்டணியில் ‘முரட்டு சிங்கிள்’ படத்தின் மூலம் மீண்டும் இணையவுள்ளது. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் ராணா என்பவர் இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஆதிக்கு ஜோடியாக நடிக்க மூன்று பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிவிப்புவெளியாகும் என்றே தெரிகிறது.

கார்ட்டூன் கேலரி