Random image

சுஷாந்த் சிங் வழக்கு : ரிபப்ளிக் டிவி மீது மும்பை உயர்நீதிமன்றம் பாய்ச்சல்

மும்பை

சுஷாந்த் சிங் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அன்று மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   அவரது தற்கொலைக்குக் காரணம் குறித்து பலவித ஊகங்கள் எழுந்த நிலையில் அவற்றை உண்மை போல் சித்தரித்து ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் டிவி ஆகியவை செய்திகள் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.  இன்று நடந்த விசாரணையில் மும்பை உயர்நீதிமன்றம் ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் டிவி உள்ளிட்டவை மும்பை காவல்துறைக்கு எதிராகச் செய்திகளை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.  மேலும் இந்த தொலைக்காட்சிகள் இந்த செய்திகளை காவல்துறையினரை அவமதிக்கும் நோக்கத்துடன் வெளியிட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும் மும்பை உயர்நீதிமன்றம், “இந்த வழக்கில் ரிபப்ளிக் டிவி மற்றும் டைஸ் நவ் டிவி ஆகியவை ஒரு துப்பறிவாளராக மாறி உள்ளது. மேலும் தன்னை ஒரு அரசு வழக்குரைஞர், மற்றும் நீதிபதியாகவும் கருதி செய்திகளை வெளியிட்டுள்ளது.  அவ்வாறு இருக்கும் எனில் எங்கள் தேவை என்ன? நாங்கள் ஏன் இருக்க வேண்டும்?” எனக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.