”செக்ஸி துர்கா”:   சர்ச்சையை கிளப்பும் மலையாள திரைப்படம்!

"செக்ஸி துர்கா" அறிவிப்பு
“செக்ஸி துர்கா” அறிவிப்பு

டவுள் வேடத்தில், அரசில்வாதிகளுக்கு கட் அவுட் வைத்தாலே சர்ச்சை ஏற்படுகிறது. அதே போல கடவுள் படத்தை உள்ளாடைகளில் பதிந்த மேற்கத்திய  நிறுவனங்களுக்கு எதிராக அவ்வப்போது கண்டனங்கள் எழுப்பப்படுகின்றன.

இந்த நிலையில், கடவுள் பெயரோடு செக்ஸை இணைத்து “செக்ஸி துர்கா” என்ரு தலைப்பு வைத்திருக்கிறார்கள் ஒரு மலையாள திரைப்படத்துக்கு!

 

ராஜஸ்ரீ தேஷ்பாண்டே
ராஜஸ்ரீ தேஷ்பாண்டே

“ஆங்க்ரி இண்டியன் ” படத்தில் நடித்த  ராஜஸ்ரீ தேஷ்பாண்டே.தான். இந்த புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தினை இயக்குபவர்,   சனல்குமார் சசிதரன். இவர்,  மாற்று திரைப்படங்களை உருவாக்குவதில் அக்கறை செலுத்துபவர்.

சனல்குமார் சசிதரன்
சனல்குமார் சசிதரன்

“‘செக்ஸி துர்கா’ என்று பெயர் வைத்தது ஏன் பப்ளிசிட்டிக்காகவா” என்று இயக்குநர் சனல்குமாரிடம் கேட்டால் மறுக்கிறார்.

அவர், “கேரள சமூகம் பாலியலை – பெண்களை, எப்படி அணுகுகிறது என்பதை  பகடியாக சொல்ல முயற்சித்திருக்கிறேன் அதற்கு “செக்ஸி துர்கா” என்பதுதான் பொறுத்தமான தலைப்பு. யாருக்காகவும், எதற்காவும் படத்தின் தலைப்பை மாற்ற மாட்டேன்.  ஓர் படைப்பின் பெயரை மாற்றுவது என்பது மிகப்பெரும் சரணாகதி.   அதை நான் செய்ய மாட்டேன்” என்கிறார் உறுதியான குரலில்.

ம்… அடுத்த சர்ச்சைக்கு தயாராகிறது கேரளா!