செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், மதுரை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு…

--

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,56,369 ஆக உயர்நதுள் ளது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 82,128 ஆக உயர்ந்துள்ளது.  இந்த நிலையில் மாவட்டங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி  மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 113 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 9,021ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், கொரோனா சிகிச்சை பெறுவோர் – 2,170 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை  6,561  ஆக உள்ளது. இதுவரை 176 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால்,  பாதிப்பு எண்ணிக்கை 8505 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஆவடியில் 120 பேரும், திருவள்ளூர் -21, சோழவரம் -20 பேர் தொற்று  உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டத்தில்  இன்று ஒரே நாளில் புதிதாக மேலும்  261 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,858-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1779 பேர் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், தற்போது 1648 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர்.

திருவண்ணாமலை  மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மேலும்146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3705ஆக உயர்வு

கன்னியாகுமரி மாவட்டம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இதன் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்கி உள்ளது.