சென்சார் போர்டை எதிர்த்து இயக்குனர் வழக்கு!

1b                                                       “போர்க்களத்தில் ஒரு பூ” படத்தில் தான்யா

லங்கையில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த ஈழப்பகுதியில் பத்திரிகையாளராக இருந்த தமிழ் பெண் இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதை மையமாக வைத்து வைத்து, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படம் தயாரிக்கப்பட்டது.

இசைப்பிரியாவாக தான்யா நடித்து இருக்கிறார். இளையராஜா இசையமைக்க, கு.கணேசன் இயக்குகிறார்.

இந்த படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டது. ஆகவே படத்தை வெளியிட முடியாத நிலை. இதையடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் கணேசன், “ ‘‘என் பூர்வீகம், தமிழ்நாடு என்றாலும் நான் வசிப்பது, பெங்களூருவில். இதுவரை ஆறு 6 கன்னட படங்களை இயக்கியிருக்கிறேன். முதன்முதலாக நான் இயக்கிய தமிழ் படம், ‘போர்க்களத்தில் ஒரு பூ’.

 

 1c

  இயக்குநர் கணேசன்

 

இலங்கையில், ஊடகவியலாளர் இசைப்பிரியா பலாத்காரப்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை உலகுக்கு வெளிப்படுத்தும் இந்த படத்தை எடுத்திருக்கிறேன்.

இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் என்னை இந்த படத்தை இயக்க தூண்டியது. இந்த படத்தை முதன் முதலாக கடந்த மே மாதம் தணிக்கைக்கு அனுப்பினேன். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தை திரையிட அனுமதி மறுத்தார்கள்.

அதைத்தொடர்ந்து படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பினேன். அப்போதும் அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்கள்.

அதன்பிறகு படத்தை டெல்லிக்கு அனுப்பினேன். அங்கு சில காட்சிகளை நீக்க சொன்னார்கள். அவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கிவிட்டு, மீண்டும் அனுமதி கோரி படத்தை அனுப்பினேன். இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காட்சியை நீக்க சொன்னார்கள். அதற்கு நான் மறுத்ததால் மீண்டும் படத்துக்கு அனுமதி சான்றிதழ் கொடுக்க மறுத்து, படத்துக்கு தடை விதித்து விட்டார்கள்.

இந்த படம், தமிழ் ஈழத்தை நியாயப்படுத்துவதாக-விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக இருப்பதாகவும், படத்தை வெளியிட்டால் இந்தியா-இலங்கை உறவு பாதிக்கும் என்றும் தணிக்கை குழுவினர் கூறுகிறார்கள்.

இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போகிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.