சென்னையின் 16 தொகுதிகளிலும் நடிகர் சூர்யாவின் விழிப்புணர்வு பிரச்சாரம்

surya
2016 -சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கினை மையமாக கொண்டு தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ பிரச்சார வாகனத்தை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தொடங்கி வைத்தார்.

இந்த வீடியோ வாகனம், சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கும் சென்று வாக்காளர்கள் மத்தியில் ஓட்டுப்பதிவின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கும். நேர்மையான ஓட்டுப்பதிவு, பணத்துக்காக ஓட்டை விற்க கூடாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது குறித்து எல்.இ.டி. வீடியோ படக்காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தேர்தல் வீடியோ படக்காட்சியில் நடிகர் சூர்யா, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்தி பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இந்த பிரச்சார வாகனம் காலை முதல் இரவு வரை விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்படவிருக்கிறது.