சென்னையை அடைக்கும் அதிமுக பேனர்கள்:

உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா? சென்னை திருவான்மியூரில் அ.தி.மு.க. பொதுக்குழு நாளை கூடுவதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பேனர்கள் சாலை ஓரத்தில் பெருளவில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இது நகரின் அழகைக் கெடுக்கிறது. இதனால் மனம் வருத்தமடைந்தவர்களில் ஒருவரா எம்.கே. பாலாஜி என்பவர், இந்த “பேனர் காட்சிகளை” வீடியோவாக எடுத்து, முகநூலில் பதிவிட்டிருக்கிறார். ஆறு மணி நேரத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் இந்த வீடியோவை பார்த்திருக்கிறார்கள். வீடியோவோடு, உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார் பாலாஜி. அந்த கடிதம்: மதிப்புக்குரிய உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு..

இன்று சென்னையில் பயணம் செய்தபோது நான் பார்த்ததை வீடியோ எடுத்திருக்கிறேன். இது அரசியலுக்கு எதிரான வீடியோ அல்ல. நகரின் அழகு இந்த பேனர்களால் சீரழிகிறதே என வருத்தப்படும் ஒரு சென்னை காதலனின் வீடியோ இது. இதைப் பாருங்கள்.. காணும் இடமெல்லாம் சாலையில் இருபுறமும் அ.தி.மு.க விளம்பரதட்டிகள்தான். சென்னையின் அழகை இது கெடுக்கிறது. இதைத் தடுக்க ஒரு சட்டத்தை இயற்ற வேண்டியது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published.