சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இனிமேல் ‘எம்ஜிஆர் ரயில் நிலையம்’.: மோடி அறிவிப்பு!

சென்னை:

சென்ட்ரல் ரயில் நிலையம், இனிமேல் எம்ஜிஆர் ரயில் நிலையம் என அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னை வண்டலூர் அருகே  கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி,  பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவேற்றப்பட்ட பல  திட்டங்களை யும் தொடங்கி வைத்தார்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தில்,அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் அதிமுக கூட்டணியின் முதல் பிரச்சாரக் கூட்டம், சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய பிரதமர் மோடி,  ” உலகின் தொன்மையான மொழி தமிழ் என்றும், ஜெயலலிதா கனவு கொண்டது போல், வளர்ச்சி மிக்க தமிழகத்தை உருவாகுவோம் என்றார். எம்.ஜி.ஆர் ஏழை எளிய மக்களுக்கு பாடுபட்டவர். ஆகவே, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பெயரில் அழைக்கப்படும்” என அறிவித்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: admk bjp alliance, Central Railway station, Chennai CentralMGR, MGR RAILWAY STATION, PM ModiChennai, அதிமுக பாஜக கூட்டணி, எம்ஜிஆர் ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல், மோடி
-=-