சொத்துக்குவிப்பு வழக்கில் புதுச்சேரி எம்.எல்.ஏ-வுக்கு ஓராண்டு சிறை! சி.பி.ஐ நீதிமன்றம் அதிரடி

ருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் புதுச்சேரி எம்.எல்.ஏ மற்றும் அவரின் தந்தை இருவருக்கும் தலா ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ அசோக் ஆனந்த். இவரது தந்தை ஆனந்தன் 2007-08  ஆகிய வருடங்களில்  புதுச்சேரி மாநிலப் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளராகப் பணியாற்றினார். இவர்களுக்குச் சொந்தமாகத் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

ஆனந்தன் பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிமாகச் சொத்துகளைக் குவித்ததாக சி.பி.ஐ-க்கு புகார் சென்றது.

அசேக் ஆனந்த்

இதையடுத்து ஆனந்தன் மற்றும் அவரின் மகன் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ ஆகிய இருவரிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்தியது.. இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ஆனந்தன்

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தலைமை நீதிபதி தனபால் இருவருக்கும் தலா ஒரு வருட சிறைத்தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதம் கட்டத்தவறினால் தலா 3 மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் மேலும்,  வருமானத்துக்கு அதிகமாகக் குவிக்கப்பட்ட ரூ. 1.57 கோடி மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published.