சோழவந்தான் திமுக வேட்பாளர் மாற்றம்

bavani

திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மதுரை (வடக்கு) மாவட்டம், சோழவந்தான் (தனி) தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் போட்டியிட, ஏற்கனவே டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் தற்போது அங்கே போட்டியிட முன்வராத காரணத்தால், ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னக்கருப்பன் துணைவியார் திருமதி சி. பவானி சோழவந்தான் (தனி) தொகுதி தி.மு. கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.