ச.ம.க. துணைத்தலைவர் ராஜினாமா: நாளை தி.மு.கவில் இணைகிறார்?

சரத் - கூட்டத்தில் காளிதாஸ்
சரத் – கூட்டத்தில் காளிதாஸ்

டிகர் சரத்குமார் தலைவராக இருக்கும் சமத்துவ மக்கள் கட்சி, கடந்த  சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து இரண்டு இடங்களைப் பெற்றது. கட்சித் தலைவர் சரத்குமா் தென்காசியிலும், துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் நாங்குநேரியிலும் போட்டியிட்டு வென்றனர்.

இருவரும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  அதன் பிறகு தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவே சரத்குமார் பேசி வந்தார். ஆனால் அவரை  அ.தி.மு.க. தலைமை பலவிதங்களில் அவமரியாதை செய்தது.

இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் பலர் பா.ஜ.கவில் சேர்ந்தனர். பிறகு துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிரிந்து சென்று தனிக்கட்சி துவக்கினார்.

இதற்கிடையே அ.தி.மு.க. தலைமையின் உதாசீனங்களை பொறுக்க முடியாமல், சரத் குமாரும் பாஜக ஆதரவாளராக மாறினார். பிறகு அதி.மு.க. வுடன் கூட்டணி வைத்தார். திருச்செந்தூர் தொகுதி மட்டும் அவருக்கு கிடைத்தது. மீண்டும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், மக்கள் கட்சியின் மாநில துணை தலைவரான பாவூர்சத்திரம் தொழிலதிபர் ஆர்.கே காளிதாஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பத்துபேருடன் தி.மு.கவில் நாளை இணையவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.