ஜார்கண்டில் 18 பேர் பட்டினிச் சாவு; விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

ராஞ்சி:

கடந்த 2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை 18 பேர் பட்டினி கிடந்து இறந்துள்ளதாக, மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பிய அறிக்கையில் ஜார்கண்ட் அரசு தெரிவித்துள்ளது.

எனினும், பசியோ, வறுமையோ இந்த சாவுக்கு காரணம் இல்லை என்றும் மாநில அரசு பொறுப்பேற்க மறுத்துள்ளது.

எனினும் இதற்கு பதில் அளித்து கடிதம் அனுப்பியுள்ள மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், பட்டினிச் சாவு குறித்த விளக்கம் தருமாறு ஜார்கண்ட் அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
21ம் நூற்றாண்டிலும் இந்தியாவில் இதுபோன்ற பட்டினிச் சாவு நிகழுவது பரிதாபமாக உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஏராளமானோர் பட்டினியாலும், வறுமையாலும் உயிரிழப்பதாக பல அறிக்கைகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.