ஜிஎஸ்டி-யால் கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெங்களூரு:

ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததை அடுத்து எரி பொருட்களுக்கான நுழைவு வரி 5 சதவீதத்தை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக டீசலின் விலை 2 ரூபாய் 80 காசுகளும், பெட்ரோல் விலை 3 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை அன்றாடம் நிர்ணயிக்கப்படுவதால் இந்த விலை குறைவு எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை என்று பெட்ரோலிய முகவர் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களை ஒப்பிடும் போது தென்னிந்தியாவில் பெங்களூருவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.