ஜி.எஸ்.டி. வரியை என்னாலேயே புரிஞ்சுக்க முடியலே!:  பா.ஜ.க. அமைச்சர்

 

போபால்:

ஜி.எஸ்.டியை இதுவரை தன்னால்  புரிந்துகொள்ள முடியவில்லை என்று  மத்தியப்பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே தெரிவித்திருப்பது பா.ஜ.க.வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

போபாலில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், அமைச்சர் ஓம் பிரகாஷ் துர்வே கலந்து கொண்டு பேசினார்.

அப்போது  அவர், “ ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை என்னால் இதுவரை புரிந்துகொள்ள இயலவில்லை. எனக்கு மட்டுமல்ல… ஜிஎஸ்டியை புரிந்துகொள்வதில் கணக்கு தணிக்கையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்குக் கூட சிரமம் இருக்கிறது” என்று பேசினார்.

பா.ஜ.கவைச் சேர்ந்த மாநில அமைச்சர் ஒருவரே இப்படி ஜி.எஸ்.டி. வரி குறித்து புரியவில்லை என்று பேசியிருப்பது பாரதிய ஜனதா கட்சியை பெரும் தர்மசங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறது.