ஜி.கே.வாசன் தவிர த.மா.கா.வினர் யார் வந்தாலும் காங்கிரஸ் கட்சி வரவேற்கும் -ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

evksel2

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று காலை சந்தித்து பேசினார். த.மா.கா.வில் இருந்து பலர் விலகி காங்கிரசில் சேர இருப்பது பற்றி இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இளங்கோவன் கூறியதாவது:-

தமாகாவில் இருந்து பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்டோர் விரைவில் காங்கிரஸில் இணைய உள்ளனர். ஜி.கே.வாசனைத் தவிர த.மா.கா.வினர் யார் வந்தாலும் காங்கிரஸ் கட்சி வரவேற்கும். மதவெறி பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய ஜி.கே.வாசன் காங்கிரஸுக்கு திரும்ப லாயக்கற்றவர். அதிருப்தி தமாகாவினருக்காக கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கோரும் எண்ணம் இல்லை. திமுக- காங்கிரஸ் கூட்டணி தொகுதி பட்டியலிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லை.