ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட திருமாவளவன் திட்டம்!

thiruma jaya

விடுதலை சிறுத்தைகள் மீதான ‘இமேஜை’ மாற்றுவதற்காக சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து திருமாவளவனும், ’’நான் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என பலரும் ஆசைப்படுகின்றனர். ஒரு பொதுத் தொகுதியில் போட்டியிட்டால் விடுதலை சிறுத்தைகள் பொதுத்தளத்தில் இயங்குவதற்கு முன்னோட்டமாக இருக்கும்.
மேலும் கட்சியின் வேகமான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பல பிம்பங்கள் உடைக்கப்படலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.அதனால் அங்கு போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனை யில் உள்ளேன். கட்சி நிர்வாகிகளின் பெரும்பாலான கருத்துக்களின் அடிப்படையில் நல்ல முடிவு எடுக்கப்படும். இப்போதைக்கும் எதையும் மறுப்பதற்கில்லை; மறைப்பதற்கும் இல்லை. வெற்றி என்பதைக் காட்டிலும்; மாற்றமே முக்கியம்’’என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் ஜெயலலிதாவை எதிர்த்துபோட்டியிடும் முடிவில் திருமாவளவன் இருப்பது 90சதவிகிதம் உறுதியாகியுள்ளது.