ஜெயலலிதா மரணத்துக்கு தி.மு.க.வின் சதியே  காரணம்: தம்பிதுரை பகீர்

சென்னை:

“அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மரணமடைய தி.மு.க.வின் சதியே காரணம்” என்று நாடாளுமன்ற மேலவையின் துணை சாபாநாயகரும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

 

சென்னை விமான நிலையத்தில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:

“அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிப்பதற்காக, தி.மு.க, திட்டமிட்டு சில சதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஜெயலலிதா எந்த குற்றமும் செய்யவில்லை. ஆனால் தி.மு.க.தான், அவர் மீது வழக்கு தொடர்ந்தது. எப்படியாவது ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பினால் அவர் காலக்கட்டத்திலே இறந்துவிடுவார் என்று திட்டம் போட்டது. இப்படி. திமுக செய்த சதிதான் ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது” என்று தம்பிதுரை தெரிவித்தார்.