ஜெயலலிதா வீட்டு முன்பு தொண்டர் தீக்குளிக்க முயற்சி

fire

சென்னையில் போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதா வீட்டின் முன்பு 21.3.2016 அன்று மதியம் அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த நபர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்தனர்.

விசாரணையில், அவர் திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் மோகன் எனத் தெரியவந்தது. மணப்பாறை கூட்டுறவுத்தலைவர் வெங்கடாச்சலம் பண மோசடி செய்ததால் மனமுடைந்த மோகன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மோகனிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.