ஜெர்மனி செல்ல மனைவியை அடுத்தவனுக்கு தாரைவார்த்த கணவன்

germany

டமாஸ்கஸ்:

ஜெர்மனி செல்ல பணத்துக்கு பதில் மனைவியுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள இடைத்தரகரை அனுமதித்த சிரியா நாட்டு கணவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டு பிரச்சனை வலுத்து வருகிறது. இதனால்  மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். அவர்களை கள்ளத்தனமாக ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்பவர்கள் அதிக அளவில் பணம் பறிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

சிரியாவை சேர்ந்த ஒருவர் தனது 30 வயது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன்  பல்கேரியாவுக்கு தப்பிச் சென்றார்.  ஐரோப்பாவுக்கு தப்பிச் சென்றுவிட்டால்  போதும் என்ற உயிர் ஆசையில் சிரியாவைச் சேர்ந்த ஒருவர் ஒரு இடைத்தரகரை நாடினார். ஜெர்மனி செல்ல நினைத்த அவரிடம் போதுமான அளவில் பணம் கையில் இல்லை. பணத்துக்கு பதிலாக தனது மனைவியை விட்டுக் கொடுக்க துணிந்தார். மனைவியுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள அந்த இடைத்தரகருக்கு அனுமதி வழங்கினார்.  பணத்திற்கு பதில் அந்த இடைத்தரகர், சிரியா நபரின் மனைவியை ஏற்றுக் கொண்டு அந்த நபரை ஜெர்மனிக்கு அனுப்பி வைத்தார். 3 மாதமாக  தினமும் அந்த இடைத்தரகர் அந்த பெண்ணுடன் உடலுறவு கொண்டுள்ளார். பின்னர் அந்த பெண் இடைத்தரகரிடம் இருந்து தப்பி தற்போது தனது குழந்தைகளுடன் பெர்லினில் வசிக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published.