ஜோதிமணி சுயேட்சையா போட்டியிட்டுமே :  குஷ்பு அசால்ட்

குஷ்பு
குஷ்பு

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அரவக்குறிச்சி இல்லாததால், வருத்தத்தில் இருக்கிறார் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி.  ஏனென்றால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே அரவக்குறிச்சி தொகுதியில் தீவிர பிரசாரத்தைத் துவக்கிவிட்டார்  ஜோதிமணி.

ஆகவே அரவக்குறிச்சி தொகுதி கைவிட்டு போனதை அவரால் பொறுத்துக்கொளள முடியவில்லை. சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

இது குறித்து பேசிய குஷ்பு, ” காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் மற்றும் காங்கிரஸ் வலுவாக உள்ள தொகுதிகளை கேட்டோம்.. ஜோதிமணி கேட்கும் அரவக்குறிச்சி தொகுதியில் ஏற்கெனவே தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. ஆகவே அதைக் கேட்வில்லை. மற்றபடி,  காங்கிரஸ் கட்சிக்கு எதிராக  சுயேட்சையாக  போட்டியிட விரும்பினால், ஜோதிமணி தாராளமாக போட்டியிடட்டும்” என்றார் குஷ்பு.