ஜோதிமணி: போட்டி இல்லை.. ஆனாலும் எதிர்ப்பு தொடர்கிறது

1

அரவங்குறிச்சி தொகுதியை காங்கிரஸ் கட்சி தனக்காக கேட்டுப்பெறாததால், அதிருப்தி அடைந்த ஜோதிமணி, சுயேட்சையாக அங்கு போட்டியிடப்பவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அந்த முடிவை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜோதிமணியிடம் பேசினோம். அவர், “நான் அரவக்குறிச்சி தொகுதியில் நீண்ட காலமாகவே களப்பணி ஆற்றி வருகிறேன். தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறேன். ஆனால் வேண்டுமென்றே அத் தொகுதியை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கேட்டுப்பெறவில்லை.

காங்கிரஸ் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் வளர்வதை இளங்கோவன் விரும்பவில்லை.

அரவக்குறிச்சி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டேன். ஆனால் என் நலன் விரும்பிகள், அந்த முடிவைக் கைவிடும்படி கூறினார்கள். ஆகவே சுயேட்சையாக போட்டியிடும் முடிவை மாற்றிக்கொண்டேன். அதே நேரம், அரவக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ்  – திமுக கூட்டணி வெற்றிக்காக உழைக்க மாட்டேன்” என்றார்.

மழைவிட்டும் தூவானம் விடவில்லை!