டவுட் ஸ்டேட்டஸ்

ரவுண்ட்ஸ்பாய்

rounds

பேஸ்புக்கை மேய்ஞ்சுகிட்டு இருந்தப்ப ரெண்டு ஸ்டேட்டஸ் பக்குனு சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சது.

இது திராவிட தேர்தல் கட்சிகளுக்காக.. குறிப்பா, மதிமுக  தலைவர் வைகோவை மனசுல வச்சு எழுதனது போல இருக்கு…

“மதிப்புக்குரிய அண்ணன் அவர்கள் பலகொலைகளை செய்தவர், என்னை கொலை செய்ய முயன்றவர், 420, லஞ்ச ஊழல் பேர்வழி, நன்றிகெட்டவர், படுபாதகம் செய்வதற்கு அஞ்சாதவர் துரோகி..” – இப்படி போகிறது பல அரசியல் தலைவர்களின் பேட்டி/ அறிக்கைகள்.

ஏன் இந்த தேவையற்ற, அருவெறுப்பூட்டும், மிகை நடிப்பு. வார்த்தைகள்..?

படிக்க.. கேட்கவே எரிச்சலாக இருக்கிறது.

மரியாதை கொடுத்தே ஆகவேண்டும் எனறு இந்த தலைவர்கள் “மனமாற” நினைத்தால், சம்பந்தப்பட்டவர் பெயருக்கு முன் “திரு” என்று சேர்த்துக்கொண்டால் போதாதா..

இவர்களது வீட்டில் ஒருவன் திருட வந்தால் கூட, “மதிப்புக்குரிய அண்ணன் திருடனார் அவர்கள்..” என்றுதான் பேசுவார்களோ..?”என்று தனது டவுட்டை வெளிப்படுத்தியிருக்கார் ஒரு பேஸ்புக்மேன்.

அடுத்த டவுட் ஸ்டேட்டஸ்:

“தேர்தல்ல நூறு சதவிகித வாக்குப்பதிவு ஆகணும்னு தேர்தல் கமிசன் உட்பட பலரும் பேசறாங்க.

இதை நிறைவேத்தத்தானே பலகட்சிங்க வாக்காளருக்கு பணம் கொடக்குறாங்க..

அதை ஏன் குறை சொல்லணும்?”

எப்படி எல்லாம் சிந்திக்கிறாங்க, பாருங்க..!