டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்டும்- ரஜினிகாந்த் டுவிட்

சென்னை:

டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள் என மிகவும் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில் ரஜினியின் கருத்து அதிரடியாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் நிதி நெருக்கடியை சமாளிக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன என பலர் கூறிய நிலையில் தற்போது ரஜினிகாந்தும் அதே கருத்தை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.