டாஸ்மாக் கடை மீது குண்டு வீச்சு! ஒருவர் கைது

wineshop

கன்னியாகுமரி:

ன்னியாகுமரி  மாவட்டத்தில் டாஸ்மாக் கடை மீது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வீசிய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. வழக்கம் போல் இன்று காலையிலும் மது வாங்க பலரும் கடை முன் திரண்டிருந்தார்கள். அந்த சமயத்தில், அங்கு ஆட்டோவில் வந்த இருவர் பெட்ரோல் குண்டுகளை  வீசினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெட்ரோல் குண்டு வீசியவர்கள் குண்டை வீசிவிட்டு மீண்டும் ஆட்டோவில் ஏறி தப்பிக்க முயற்சித்தனர். அங்கிருந்த சிலர், ஆட்டோவை துரத்தி மடக்கிப்பிடித்தனர். இருவரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ராஜன் என்பவர் மட்டும் பிடிபட்டார்.

இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   மது ஒழிப்பு போராளி தியாகி சசிபெருமாள், கன்னியாகுமரி மாவட்டத்தில் உண்ணாமலைக்கடை பகுதியில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற போராடியபோதுதான் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .

Leave a Reply

Your email address will not be published.