டிஜிட்டல் பண பரிவர்த்தனை விளம்பர செலவு ரூ. 94 கோடி…மத்திய அரசு தகவல்

டெல்லி:

பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு மக்கள் மத்தியில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மற்றும் ரொக்கமில்லா வர்த்தகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இதுவரை சுமார் 94 கோடி ரூபாயை மத்திய அரசு செலவு செய்துள்ளது.

இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர் பேசுகையில், ‘‘ இதுவரை டிஜிட்டல் பணபரிவர்த்தனை மற்றும் ரொக்கமில்லா வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரங்களுக்காக மொத்தம் ரூ. 93.93 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இதில் செய்தித் தாள் விளம்பரகளுக்கு மட்டும் ரூ.14.95 கோடி வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பத்திரிகைகளுக்கு சேர வேண்டிய தொகையை இ-பேமன்ட் மூலம் வழங்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.