டிரங்க் அன்டு டிரைவ் பார்ட்டிகளுக்கு எச்சரிக்கை: புத்தாண்டு கொண்டாடத்தின்போது சிக்கினா அவ்ளோதான்…!

சென்னை:

2018ம் ஆண்டின் இறுதி நாள் இன்று. இன்று நள்ளிரவு புத்தாண்டு பிறக்க உள்ளது 2019ம் ஆண்டு. பிறப்பை ஆடல் பாடல் என ஆடம்பரமாக கொண்டாட இளைஞர்கள் பட்டாளம் இப்போதே தயாராகி வருகிறது.

இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாடும் பார்ட்டிகளுக்கு சென்னை மாநகர காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடுமை யான எச்சரிக்கையை காவல்துறை அறிவித்து உள்ளது.  குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டினால், அவர்களது லைசென்ஸ் உடனே ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளது.

புத்தாண்டை வரவேற்கும் விதமான சென்னை மாநகர மக்கள் , சென்னை கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கனோர் குவிந்து ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர். அந்த சமயத்தில் ஒருசிலர் குடித்துவிட்டு அநாகரிகமாக நடந்துகொள்ளும் சம்பவங்க ளும் நடைபெறுவது உண்டு. அதுபோல புத்தாண்டை மதுவுடன் வரவேற்கும் நிகழ்ச்சிகளும் அதிகரித்து வருகின்றன. அதன் காரணமாக விபத்துக்களும்  ஏற்பட்டு வருகிறது.

இதை தடுக்கும் பொருட்டு, போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனனர். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பைக் ரேஸை தடுக்கும் வகையில் 20 பைக் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சென்னையில் 368 இடங்களில் வாகன தணிக்கைக் குழு மையங்கள் அமைக்கப்பட்டி ருக்கின்றன. மயிலாப்பூர், ராயபேட்டை, தி.நகர். திருவல்லிக்கேணி, மந்தவெளி, கிண்டி, கீழ்ப்பாக்கம், அடையார், தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் மற்றும் மெரீனா, எலியட்ஸ் பீச்சுகளிலும் போலீசார் சோதனைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், அவர்களின் டிரைவிங் லைசென்ஸ் உடனடியாக ரத்து செய்யப்படும். இதனால், பின்னாளில் பாஸ்போர்ட், விசா முதலானவற்றை எடுக்கும் போது அதற்கு தடையில்லாச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.