டில்லி அரசு அலுவலக தீ விபத்தில் ஆவணங்கள் நாசம் : சதி வேலையா என சந்தேகம்

 

டில்லி

டில்லி அரசு அலுவலகத்தில் ஏராளமான ஆவணங்களை அழித்த தீ விபத்துக்கு  சதி வேலை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

டில்லியில் உள்ள அயோத்யா பவன் மாளிகையில் ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன.  இந்த மாளிகையின் ஐந்தாம் மாடியில் ஊனமுற்றோருக்கு பணி வழங்கும் துறை அமைந்துள்ளது.   இந்த அலுவலகம் கடந்த வாரம் இந்த மாடிக்கு மாற்றப் பட்டுள்ளது.   இந்த பகுதியில் அரசு பணிகள் குறித்த தணிக்கை நடைபெற்று வந்தது.

சென்ற வாரம் வரை நடந்த இந்த தணிக்கைக்கான கோப்புகள் அனைத்தும் அந்தந்த துறைகளுக்கு மாற்றப்படாமல் இருந்துள்ளன.  இந்நிலையில் நேற்று முன் தினம் திடீரென இந்த அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   இந்த தீ விபத்தில் எம் பி கோத்ரா என்னும் ஒரு பாதுகாப்பு துறை அதிகாரி சிக்கி மரணம் அடைந்துள்ளார்.

தற்சமயம் தணிக்கை செய்யப்பட்டு வந்த கோப்புகள், தணிக்கை  அறிக்கை ஆகியவை அனைத்தும் இந்த தீ விபத்தில் முற்றிலுமாக அழிந்துள்ளன.   கடந்த 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒளிரும் இந்தியா திட்டத்தின் கோப்புகள் இங்கு தணிக்கை செய்யப்பட்டு வந்துள்ளன.   இந்த தீ விபத்து இங்குள்ள அமைச்சரவை அலுவலகத்தில் ஆரம்பித்து கட்டிடமெங்கும் பரவியதாக தீயணைப்பு அதிகாரி அனில் கார்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசு அதிகாரி ஒருவர், “இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு மிகவும் மெதுவாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.   பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று என கூறப்பட்ட இந்த திட்டத்தின் மெதுவான நடவடிக்கைகள் குறித்து தணிக்கை நடந்தது.    இது பிரதமரின் திட்டத்துக்கு ஒரு பின்னடைவு ஆகும்.   இந்த ஆவணங்கள் அனைத்தும் தீவிபத்தில் எரிந்துள்ளன.

இந்த திட்டத்துக்கான வரைவுப் பணிகள், அதற்கான செலவுக் கணக்குகள்,  கணக்குகளின் தணிக்கை அறிக்கை உள்ளிட்ட பல ஆவணங்கள் எரிந்துள்ளன.   இதனால் இந்த திட்டத்தின் சாதனைகள் குறித்து அரசு தெரிவிக்க இயலாமல் போனதாக கூறப்படுகிறது.    ஆனால் இந்த திட்டத்தில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்பதே உண்மையாகும்.    இந்த தீவிபத்துக்கு சதி வேலைகள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. ” என தெரிவித்துள்ளார்.

 

Thanx : “THE WIRE”