டில்லி : சிங்கப்பூரில் பயிற்சி பெறும் 400 அரசு பள்ளி ஆசிரியர்கள்

டில்லி

டில்லி அரசு சிங்கப்பூரில் பயிற்சி பெற 400 ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அனுப்பவுள்ளது.

டில்லி அரசு வருடா வருடம் சிங்கப்பூரில் உள்ள தேசிய கல்வி கல்லூரியில் பயிற்சி பெற அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கிறது.   இந்த ஆசிரியர்கள் அரசு செலவில் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.  அத்துடன் பயிற்சி அளிக்க மற்றும் உள்ள செலவுகளையும் அரசு ஏற்றுக் கொள்கிறது.

சென்ற வருடம் இதே போல 200 டில்லி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிங்கப்பூரில் பயிற்சி பெற்றுள்ளனர்.  இந்த வருடம் பயிற்சிக்காக 400 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்ப உள்ளனர்.  இது குறித்த தகவலை  டில்லி துணை முதல்வர் சிசோடியா டிவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.