டில்லி விமானநிலைய சுங்க வரியில்லா கடைகளுக்கு ஜிஎஸ்டி…புதிய அறிவிப்பு

டில்லி:

டில்லி விமானநிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கான சுங்க வரியில்லா கடைகளில் (டூட்டி ஃபிரி) இனி ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மறைமுக வரிவிதிப்பு திட்டத்தின் மூலம் இத்தகைய கடைகளுக்கு சுங்க வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு சுங்க வரியில்லா கடைகளுக்கு மத்திய விற்பனை வரி மற்றும் மதிப்பு கூட்டுவரியில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த கடைகள் ஏற்றுமதி மற்றும் விநியோக கடைகளாக கருத்தப்பட்டு இந்தியாவின் சுங்க எல்லைக்கு வெளியே இருந்தது.

இந்நிலையில் டில்லி ஏஏஆர் அமர்வு எனப்படும் அத்தாரிட்டி ஃபார் அட்வாஸ் ரூலிங் அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு விற்பனை செய்யப்படும் பொட்களை வெளிநாடுகளுக்கு பயணிகள் கொண்டு செல்லும் காரணத்தால் சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் கடை இந்திய பிராந்தியத்திற்குள் இருப்பதால் அவை ஜிஎஸ்டி குடையின் கீழ் வரும் என்று தெரிவித்துள்ளது.