டில்லி : விவசாயிகளுக்கு போலிஸ் எச்சரிக்கை

 டில்லி

பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தச் சென்ற தமிழக விவசாயிகள் அங்கிருந்து எச்சரித்து அகற்றப்பட்டனர்.

தமிழக விவசாயிகள் நல்லக்கண்ணு தலைமையில் இன்று பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அங்கு வந்த போலீசார், போராட்டம் நடத்த ஜந்தர் மந்தர் பகுதியில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வேறு இடத்தில் போராட்டம் நடத்துவது சட்டப்படி தவறு என எச்சரித்து அங்கிருந்து அகற்றப்பட்டனர்.

தற்போது நாடளுமன்றப் பகுதியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது