டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா அக்டோபரில் ‘அம்மா’ ஆகிறார்

மும்பை:

இந்திய டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சாவுக்கும் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தற்போது இந்த தம்பதி குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக சமூக வலை தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆம், சானியா மிர்சா தற்போது கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். இதை எடுத்து கூறும் வகையில் ஒரு புகைப்படத்தையும் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அக்டோபரில் பிறக்க கூடும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ள குழந்தைக்கு மிர்சா மாலிக் என்று பெயர் சூட்ட முடிவு செய்துள்ளனர். இந்த தம்பதி கடந்த ஏப்ரல் 12ம் தேதி தங்களது 8வது திருமண நாளை கொண்டாடினர். 31 வயதாகும் சானியா மிர்சா மூட்டு பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஓய்வில் இருந்து வருகிறார்.