புதுடெல்லி:

ஆம் ஆத்மி அரசின் இலவச மெட்ரோ ரயில் பயண திட்டத்தை ரத்து செய்யுமாறு பிரதமர் மோடியை மெட்ரோ முன்னாள் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.


டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய பெண்களுக்கு இலவசம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்புக்கு டெல்லி மெட்ரோ ரயில் முன்னாள் நிர்வாக இயக்குனர் இ.ஸ்ரீதரன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், மெட்ரோ ரயில் மற்றும் பஸ்களில் பெண்கள் அனைவருக்கும் இலவச பயண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் மெட்ரோ ரயிலுக்கான உழைப்பும் திறமையும் வீணாகும். இந்த முடிவில் பிரதமர் குறுக்கிட்டு தடை விதிக்க வேண்டும்.

மெட்ரோ நிர்வாக இயக்குனர் பதவியிலி
ருந்து விலகியபின், அதன் நிர்வாகத்தில் நான் தலையிடுவதில்லை.

சமீபத்தில் பெண்கள் அனைவரும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பு என்னை தலையிட வைத்துவிட்டது.

பணம் கொடுத்து பயணம் செய்ய முடிந்த பெண்களும் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று சொல்வது என்ன நியாயம்.

இந்த முடிவால் இத்திட்டத்துக்கான கடனை திருப்பிச் செலுத்துவதில் பாதிப்பு ஏற்படும்.

டெல்லி மெட்ரோவின் முதல் கட்ட இயக்கத்தை தொடங்கியபோது, யாருக்கும் இலவச, பயணச் சலுகை தரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

பெண்களை இலவசமான பயணிக்க அனுமதித்தால் அரசுக்கு ஆண்டுதோறும் 1,560 கோடி இழப்பு ஏற்படும் என்று மாநில அரசே தெரிவித்துள்ளது  என்று குறிப்பிட்டுள்ளார்.