டேக் த டூ ஹண்ட்ரண்ட் ருப்பீஸ்: இப்போதைய இணைய டிரெண்ட்

1

ர இருக்கும்  தமிழக தேர்தல் பிரசாரம் புதிய பாணியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.   திராவிட முன்னேற்ற கழகத்துக்காக மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிராண்ட் மொனாகிஸ் என்ற நிறுவனம் தேர்தல் ‘பணி’களைச் செய்து வருகிறது.

இந்த நிறுவனம் கடந்த புதன்கிழமை சென்னை மற்றும் தமிழகத்தில் இயங்கும் வலைதள பதிவர்களுக்கு ஒரு அழைப்பை அனுப்பி வைத்தது.  அதில்,  “உங்களது ஒவ்வொரு பதிவுக்கும் பணம்’  என்ற தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள இமெயிலில் “ அ.தி.மு.க. அரசுக்கு எதிராக நாங்கள் தரும் செய்தியை அப்படியே நகல் செய்து (Copy) , சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டும் (Paste). இதற்காக தினமும்  ரூ. 300 வரை சன்மானமாக அளிக்கப்படும்.  வாரா வாரம் பணம் வந்து சேரும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

07Y-SSH1அந்த மெயிலில் குறிப்பிட்டிருந்த  தொலைபேசியை தொடர்புகொண்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் தீபக் கார்த்திக்கிடம்,  அந்நிறுவனத்தின் நிர்வாகி, “இந்தப் பணிக்காக 10 பேரை அழைத்து வாருங்கள். அப்படி  அழைத்து வந்தால்  சம்மானம் இரு மடங்காக வழங்கப்படும்” என்றார்.

07Y-SSH2இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. தி.மு.க. மட்டுமின்றி பா.ம.கவும் இது போல செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .

இப்போது இந்த செய்தி, சமூக ஊடகங்களில் #takethe200rupees என்ற பெயரில் ட்ரெண்டாக பரவி வருகிறது. .

 

கார்ட்டூன் கேலரி