“டைரக்டர் அட்லி.. you are too bad!” : இயக்குநர் விஜயபத்மாவின் “தெறி”க்கும் விமர்சனம்

திரைப்பட இயக்குநர் விஜயபத்மா அவர்களின் முகநூல் பதிவில் இருந்து..

 

1

சுவிஷேச கூட்டத்துக்கு போறோம்னா வாய் தானா ஜீஸஸ்னு சொல்லும்..திருப்பதி போனா கோவிந்தான்னு சிலிர்க்கும்.அதுமாதிரி தளபதி விஜய் படத்துக்கு போனா இப்படித்தான் இருக்கும்னு தெரிஞ்சுதான”தெறி”மாஸ் ஆக்ஷன் படம் பார்க்க போறோம்.அப்புறம் படம் பார்த்துட்டு அட்லீங்கிற இயக்குனர நான் எப்படி திட்டி விமர்சனம் எழுத முடியும்?

இந்தப் படத்தை நைட்ஷோ பார்த்துட்டு அந்த நடுக்குற குளிர்ல எமோஷன் தாங்காம வியர்த்தது. வீட்டுக்கு வந்ததும் கண்ணாடிக்கு முன்னாடி நின்னு என்னை நானே திட்டிகிட்டேன்.

மியூஸிக் டைரக்டர் ஜி.வி. பிரகாஷ் அவர்களே..  இனி நீங்க நடிக்க மட்டும் செய்யலாமே…! நடிக்கறதுல  மட்டும்தான் பிரதர் டூப் போடணும் தெறில உங்க டூப் யாரோ மியூசிக் போட்டுடாங்களே பிரதர்.

அட்லீ உங்க மேக்கப்மேன கோஞ்சம் கவனிங்க.. உங்க மேடை பேச்சு மாதிரியே அவரும் எல்லோர் மூகத்திலேயும் கொஞ்சம் ஓவரா மேக்கப் அப்பிட்டார்.

ஒளிப்பதிவாளர் மிஸ்டர்ஜார்ஜ்… .நீங்க பாவம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

“கத்தியில போடறது ஈஸி. பேனா எடுத்து எழுதுறது கஷ்டம்” –  வசனகர்த்தா ரமணவாசன் உணர்ந்து எழுதியிருக்கிறார் போலிருக்கிறது.  விஜய் படத்துக்கு வசனம் எழுதுறது கயிறு மேல நடக்கிறமாதிரி அவ்வளவு சிரமம். ஆனாலும் ரமணன் கிடைச்ச இடத்துல நின்னு கபடி விளையாடி இருக்கிறார்

டைரக்டர் அட்லீக்கு ஒரு கேள்வி…  விஐய் பார்க்க போற பொண்ணு சுனைனாவை ஐயர் பொண்ணுனு காட்றீங்க.   அதன் மூலம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க? முதல்ல ஜாதியத்தாண்டி வாங்க பாஸ்.

விஜயபத்மா
விஜயபத்மா

அப்புறம்…  சென்டிமெண்ட் ஸீன் வச்சா படம் பிச்சிக்கும்னு யாராவது உங்ளுக்கு வேப்பிலை அடிச்சி ஏத்தி விட்டாங்களா படம் முழுக்க அழுகாச்சியா இருக்கு.

அதே போல ஹீரோ சென்டிமெணட்னா அழணும்னு உங்க இயக்குனர் சங்கர் பாடம் எடுத்தாரா? டாக்டர்ஸ் ஆபிஸர்ஸ் எல்லோரும் அழறாங்க. கலைப்புலி தாணு உங்க படத்துக்கு கிளிசரின் வாங்கியே காலி ஆயிருப்பார்னு நினைக்கிறேன்.

நல்ல சம்பளம் வாங்கி இருப்பீங்க.. அடுத்து தெலுங்குல மகேஷ்பாபு படம் பண்ண போறதா கேள்வி பட்டேன். பளீஸ் அப்படியே போய்டுங்க.

அட்லீ…  நல்ல தமிழ் படங்கள இப்படி காப்பி அடிச்சு நாசமா ஆக்றீங்களே..இது உங்களுக்கே அநியாயமா தெரியல..ப்ளீஸ் போங்க போயி தெலுங்கு தேசத்த காப்பாத்துங்க. ஆள் தமிழ் ஹீரோஸ் பாவம்!

கடைசியா ஒரு வார்த்தை அந்த முள்ளும்மலரும் லாபாயிணட், உதிரிபூக்கள் கிளைமாக்ஸ்.. மெல்லிய மெட்டி ஒலியில் காதில் கவிதை சொன்ன இயக்குநர் மகேந்திரனை வில்லன் ஆக்கியிருக்கீங்க.

அத்தனை ரவுடிகளும் தெறியாக சண்டை போடும்போதும் அசத்தலாக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து அப்படி ஒரு லுக் விடுகிறாரே மகேந்திரன்…  அப்படிதான் இன்னமும் எங்கள் மனதில் அவர் இயக்குநராக சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருக்கிறார்.

அவரை நடிக்க வைத்து  ஒரே படத்தில் காலியாக்கி 70வயது கம்பீரத்தை தலைகீழாக கட்டி தொங்க விட்டிட்டீங்களே அட்லீ…you are too bad!