தன்மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்க எடப்பாடி நெருப்பில் இறங்குவார்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அலம்பல்

சென்னை:

ன்மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்க எடப்பாடி நெருப்பில்கூட இறங்குவார் என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தெகல்ஹா முன்னாள் ஆசிரியர்  சாமுவேல் வெளியிட்டுள்ள ஆவனப்படத்தில், இந்த சம்பவத்துக்கும் முதல்வர் எடப்பாடிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி உடனே பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஆனால், தனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  கொட நாடு விவகாரத்தில் தன்மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலிலும், நெருப்பிலும்கூட இறங்குவார் என  கூறி உள்ளார்.

மேலும்,  அதிமுக ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாது  என்றவர்,   பிரதமர் மோடியின் ஆட்சியில் நிறையும் இருக்கிறது, குறையும் இருக்கிறது, ஆனாலும் அவர் மீது எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்றும் கூறினார்.