தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் இன்று சற்றே குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4879 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,61,264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 10,314 பேர் உயிர் இழந்து 6,07,203 பேர் குணம் அடைந்து தற்போது 43,747 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 1212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை சென்னையில் 1,83,251 பேர் பாதிக்கப்பட்டு 3,428 பேர் உயிர் இழந்து 1,66,067 பேர் குணம் அடைந்து தற்போது 13,756 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 39,621 பேர் பாதிக்கப்பட்டு 604 பேர் உயிர் இழந்து 36,870 பேர் குணம் அடைந்து தற்போது 2,147 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 37,511 பேர் பாதிக்கப்பட்டு 497 பேர் உயிர் இழந்து 32,175 பேர் குணம் அடைந்து தற்போது 4839 பேர் சிகிச்சையில் உள்ளனர்.